சுவையான பச்சை மிளகாய் அல்வா!

அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.

1 கப் பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக், விதைகளை நீக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரில் உள்ள பச்சை மிளகாயை எடுத்து இதில் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதுபோல் 3 முறை செய்யவும்.

இதன் மூலம், மிளகாயில் உள்ள காரத்தன்மை குறையும். சூடு ஆறியதும், மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு கடாயில் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி, சூடானதும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து மிளகாயின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர், ¼ கப் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

1 டீஸ்பூன் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து, பச்சை மிளகாய் கலவையில் சேர்த்து, தொடர்ந்து கிளறுங்கள். இது நன்றாக கலந்து, ஓரங்களில் நெய் பிரிந்து வரும் சமயத்தில், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கி விட வேண்டும்.