காபி வகைகளும் அதன் நன்மைகளும்!

பிளாக் காபி : சர்க்கரை, பால், கிரீம் சேர்க்காத பிளாக் காபியில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருக்கின்றன.

அதே நேரத்தில் உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புகள், கலோரி மட்டுமே உள்ள சர்க்கரை என்று எதுவும் இல்லை என்பதால், இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதில் பிளாக் காபி முதலிடத்தில் உள்ளது.

எஸ்பிரசோ காபி : கேபின் கலந்த மற்ற பானங்களை விட அதிக சுவையையும், குறைவான கலோரியையும் கொண்டது.

இதில் உள்ள பாலிபினால், இதய ஆரோக்கியத்துக்கு மிதமான அளவில் உதவுவதால், இதற்கு இரண்டாம் இடம்.

கோல்ட் காபி : சூடான காபியை விட மென்மையாக அமிலத்தன்மை குறைந்ததாக இருக்கும்.

இந்த காபி வயிற்று வலி, செரிமான பிரச்னை இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது.

அதனால், இதய ஆரோக்கியத்துக்கு காபி என்றால், பிளாக் காபி குடிக்கலாம். சுவை விரும்பாதவர்கள், மிகக் குறைந்த அளவில் பால் சேர்த்து குடிக்கலாம்.