மன அழுத்தத்தை குறைக்கும் உதவும் நிலா பால்

ஒன்றரை டம்ளர் பசும் பாலை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். இதில், அரை டீ ஸ்பூன் அஸ்வகந்தா பொடி, கால் டீ ஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்க்கவும்.

மேலும், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகு தூள், லவங்கப் பட்டை பொடி மற்றும் ஏலக்காய் தூள் தலா இரண்டு சிட்டிகை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பால் ஒரு டம்ளர் அளவு குறைந்ததும், அடுப்பை அணைத்து, பாலை வடிகட்டி, பால் வெதுவெதுப்பாக ஆறியதும் அரை டீஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கவும். இரவு நேரத்தில் உணவுக்கு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன், தூங்குவதற்கு 1 மணி நேரம் முன் இந்த நிலா பாலை குடிக்க வேண்டும்.

தொடர்ந்து இப்படி மூன்று மாதங்கள் செய்தால், தூக்கமின்மை பிரச்னைக்கு இயற்கையாகவே நிவாரணம் கிடைக்கும்.

காரணம் இந்த மூலிகைகளில் டிரை எத்திலின் கிளைக்கால் என்ற வேதிப் பொருளும், ஆன்டி ஆக்ஸ்சிடென்ட் சத்துக்களும் அதிகளவில் உள்ளன; இது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

தூக்கத்தில் பாதியிலேயே விழிப்பது, தேவையற்ற சிந்தனைகள், மன அழுத்தம் இவற்றையும் இயற்கையிலேயே சரி செய்து நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களும் வாரத்தில் ஒரு நாள் இரவில் நிலா பால் குடிக்கலாம்.