வளம் தரும் வாழைப்பூவின் பலன்கள்...
வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாகவும், வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. மேலும் அதிக ஊட்டச்சத்து மிக்கது.
பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவை குணமாகும். ஆண்களுக்கு விந்து விருத்திக்கு உதவும்.
இதன் பூவை பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீங்கும். மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, ரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் திறன் கொண்டது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
ரத்த அழுத்தம், ரத்த சோகை வராமல் தடுக்கும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அவற்றை சுத்திகரிக்கும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.
வாழைப்பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், கை கால் எரிச்சல் நீங்கும்.