நீரிழிவு பாதிப்புக்கு ஏற்ற வாழைத்தண்டு துவையல்! ரெசிபி இதோ!!

வாழைத்தண்டில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. இதில் இருக்க கூடிய துவர்ப்பு சுவை நீரிழிபு பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

இதெல்லாம் தேவை: வாழைத்தண்டு துண்டு - 2 கப், மிளகு, உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2,

கறிவேப்பிலை, இஞ்சி, கடுகு, பெருங்காயத்துாள், புளி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு, தேங்காய்த் துருவல், நல்லெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: வாழைத்தண்டு துண்டுகளை நார் நீக்கி, நீரில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும். இதனுடன், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.

கொரகொரப்பானதும், வெந்த வாழைத்தண்டு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையில் கடுகு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து ஊற்றவும்.

கமகம மணத்துடன், 'வாளைத்தண்டு துவையல்' தயார். சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.