மூலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் துத்திக்கீரை!
ஆசனவாயில் எரிச்சல், வலி, ரத்தக்கசிவு, அரிப்பு, உட்காரவே முடியாமல் நெருடல், குத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
'ஆசனவாயில் விரல் பரிசோதனை' வாயிலாக உள், வெளி, ரத்த மூலம் என்ற மூன்றில் என்ன வகை என்பதைக் கண்டறியலாம்.
துத்திக்கீரை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, தினமும் 10 கிராம், ஐந்து நாட்கள் சாப்பிடலாம்; வலி, எரிச்சல் கட்டுப்படும்.
துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும், தோடு வடிவமான காய்களையும் கொண்டது.
துத்தி இலைகளைப் பறித்து நிழலில் காய வைத்து, பொடி செய்து தினமும் இருவேளை அரை டீ ஸ்பூன் அளவு மோருடன் கலந்து, 48 நாட்கள் குடிப்பதால், மூல நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
துத்திக்கீரை சூரணம் மட்டும் அல்லாமல் திரிபலா சூரணம், கடுக்காய் லேகியம், கருணை லேகியம், மூலக்குடார தைலம், நத்தை சிப்பி பற்பம், சிலாசத்து பற்பம் போன்ற எளிய சித்த மருந்துகளால் நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாக நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மூல நோய் வராமல் தடுக்கும்.