தினமும் 2 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பல உடல் நல பிரச்னைகள் நீங்கும். சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக மாறிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறை என கூறப்படுகிறது.

பூண்டில் அல்லிசின் உள்ளது, இது மனதையும் மூளையையும் ரிலாக்ஸ் செய்யும் ஒரு கந்தக கலவை ஆகும்.

தூங்கும் முன் இரு பற்கள் பூண்டு சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும், தூக்கமின்மையை எதிர்த்துப் போராடும்.

கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் அதை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

இதில் உள்ள வைட்டமின்கள் சளி, காய்ச்சலை சரி செய்து அவற்றிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கும்.

பூண்டு கொழுப்பைக் குறைக்கவும், ஒட்டுமொத்த எடையைக் குறைக்கவும் உதவுவதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், பெருங்குடல், வயிற்று, கணையம், மார்பகம் உள்ளிட்ட பல புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.