நொறுங்கத் தின்றால் நூறு வயது... அதற்காக 32 முறை மெல்லவேண்டுமா?

உணவை வேகவேகமாக உண்பதால் பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் தொடர்புகொள்ளாமலே, உணவுப் பொருட்கள் நேரடியாக உணவுக்குழாய்க்குள் செல்லும்.

இதனால் வாயில் உள்ள தசைகளுக்கு வேலை கொடுப்பதில்லை. எப்போதும் பற்கள், தாடைத் தசைகள், நாக்கு, எச்சில் ஆகியன உணவை நொறுக்குவதுதான் செரிமானத்தின் முதல் வேலை.

உணவை மென்று சாப்பிடாமல் விழுங்கிக்கொண்டிருந்தால், வயிற்று உப்புசம், உணவு எதுக்களித்தல், வாய்வுப்பெருக்கம் போன்ற பிரச்னைகள் வரும்.

உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் வேகமாக உள்ளிழுக்கப்படும்.

நாம் சாப்பிடும் மாவுப்பொருள்களை உடைக்கும் செயல் எச்சில் சுரப்புகளில் உள்ள 'அமைலேஸ்' நொதியால் வாய்ப்பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது.

மேலும் வைட்டமிண்களும், கனிமங்களும் உடலுக்கு தேவையான அளவில் கிடைக்கும். உணவை மென்று சாப்பிடுவதால் பற்களுக்கு பலம் உண்டாகும்.

மெதுவாக சாப்பிடுவதன் மூலம் வயிறு நிறையும், இதனால் நீங்கள் அதிக உணவுகளை சாப்பிட மாட்டீர்கள், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் 32 முறை மெல்ல வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை, இருப்பினும் பழக்கத்திற்காக கூட அதனை பின்பற்றலாம்.