சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்களோ மிகவும் பெரிது...
சின்ன வெங்காயத்தில் வைட்டமின் 'சி, ஏ, கே, பி2, பாஸ்பரஸ், மெக்னீசியம், போலேட்' மற்றும் 'கால்ஷியம்' போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன; நார்ச்சத்தும் அதிகம் உள்ளது.
இதை சாப்பிடுவதால், நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. இதில் உள்ள வைட்டமின்கள், புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கின்றன. உடலில் பாக்டீரியா, வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால், உடல் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தின் நெடி, சில தலைவலிகளை குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பையும், ரத்த குழாயின் உள்ளே உள்ள அடைப்புகளையும் நீக்கும் திறன் கொண்டது. வெங்காயத்தின் பயன் முழுமையாக கிடைக்க, அதை எண்ணெயில் அதிகம் வதக்க கூடாது.
அம்மை நோய் வராமல் தடுக்கவும், வந்தால் விரைவில் குணமாகவும், சின்ன வெங்காயம் உதவுகிறது.
இந்திய மக்கள், குடல் புற்றுநோய் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு வெங்காயமும், மஞ்சளும் முக்கிய காரணம்.
தினமும், மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
சின்ன வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள், சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு சின்ன வெங்காயம், சிறந்த தீர்வாகும்.
தலைமுடியில் பொடுகு, மூடி கொட்டுதல், புழு வெட்டு, கிருமித் தொற்று இருந்தால், சின்ன வெங்காயம் சாறு தடவலாம்.