அவல் தோசை ரெசிபி இதோ

அரிசி - இரண்டரை கப், உளுத்தம் பருப்பு - 1 கப், அவல் - கால் கப்.

சீரகம் - 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

அரிசி, உளுத்தம் பருப்பை ஐந்து மணி நேரமும், அவலை 45 நிமிடமும், தனித்தனியாக ஊற வைக்கவும்.

இரவே அனைத்தையும், தோசை ஊற்றும் பதத்திற்கு மாவாக அரைத்து, எட்டு மணி நேரத்துக்கு புளிக்க வைக்கவும்.

பிறகு, மாவில் உப்பு சேர்த்து, வார்த்தெடுத்தால் மிருதுவான அவல் தோசை ரெடி.

இதை கார சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் விரும்பி உண்பர்.