ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது சரியா?

பொதுவாக எப்போதும் உணவை பொரிக்க எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது அதன் பண்புகள் சிதைவடைகிறது.

அதே எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது அதில் நச்சுத்தன்மை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அந்த எண்ணெய் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாற்றிவிடும்.

மேலும் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து, ரசாயன பண்புகள் போய்விடும்.

குறிப்பாக இந்த எண்ணெயில் டிரான்ஸ் பேட் உருவாகும். இது இயற்கையான கொழுப்பு அல்ல. மேலும் டிரான்ஸ் பேட் நம் இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

உபயோகித்த எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது குடல் அழற்சி பாதிப்பு தோன்றும். உடலில் உள்ள ஆரோக்கிய செல்கள், அவற்றால் ஆரோக்கியமற்ற செல்களாக மாற்றும்.

அதே எண்ணெயில் உணவுகளை பொரித்து உண்ணும் போது வயிறு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும். குறிப்பாக அசிடிட்டி பிரச்னை உண்டாகும்.

தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தினால் இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை நன்கு வடிகட்டி பாட்டிலில் சேர்த்து வைக்கலாம். இதை 2 நாட்களுக்குள் தோசை சுடும் போதும், குழம்பு தாளிப்பதற்கும் பயன்படுத்தி காலி செய்வது நல்லது.