டாக்சின்களை வெளியேற்றும் முட்டைகோஸ் ஜூஸ்!
முட்டைகோசில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளன.
முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளது. இதை குடிப்பதால், உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்சின்களை அழித்து, எளிதாக உடல் எடையைக் குறைக்க உதவும்.
இதில் அதிகப்படியான 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.
இதை தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன், என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது.
தலைமுடி உதிர்வதை குறைக்கிறது. சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது.
செரிமான மண்டலத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பீட்டா- கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், கண்புரை ஏற்படுவதைத் தடுக்கிறது.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்கிறது.