எளிதில் செரிமானமாக உதவும் மோர்க்களி ரெசிபி

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி மாவு - 1 கப், மோர் - 4 கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2.

வெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு - சிறிதளவு, முந்திரி, கேரட் துருவல், கருவேப்பிலை, பெருங்காய தூள் மற்றும் உப்பு - தேவையான அளவு.

பச்சரிசி மாவில் மோர் ஊற்றி நன்றாக கலக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துண்டாக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதனுடன் மாவுக்கலவை, உப்பு, வெண்ணெய் போட்டு கிளறவும்.

பெருங்காய துாள் துாவி இறக்கிய பின், முந்திரி, கேரட் துருவல்களை போடவும்.

இப்போது சுவையான, மோர்க்களி ரெடி. எளிதாக செரிமானமாகும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.