ஹெல்த்தியான எள் துவையல்...!

தேவையான பொருட்கள்: கருப்பு எள் - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 3 பல்,

புளி மற்றும் துருவிய தேங்காய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

எள்ளை சுத்தம் செய்து மிதமான தணலில் ஓரிரு நிமிடங்களுக்கு வறுக்கவும்.

பின், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், பூண்டு, உப்பு புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்தால் ஆரோக்கியமான மற்றும் சுவையான எள் துவையல் இப்போது ரெடி.

சாதத்துடன் சைடு டிஷ் ஆக சாப்பிடலாம்; ஊட்டச்சத்துகள் நிறைந்தது இந்த எள் துவையல்.