ஹெல்த்தியான கம்பு வடை !

தேவையான பொருட்கள்: கம்பு மாவு - 500 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், தயிர் - 0.5 கப்,

உப்பு, எண்ணெய், இஞ்சி, பச்சை மிளகாய், தண்ணீர் - தேவையான அளவு, மஞ்சள் துாள், மிளகாய்துாள் மற்றும் பெருங்காயத்துாள் - சிறிதளவு.

கம்பு மற்றும் கோதுமை மாவுடன் எண்ணெய், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், அரைத்த எள், தயிர், மஞ்சள் துாள், மிளகாய் துாள், பெருங்காயத்துாள், உப்பு சேர்க்கவும்.

இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி, நன்றாக பிசைந்து, இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

பின், மாவை, சிறிய உருண்டைகளாக்கி வடையாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான 'கம்பு வடை' ரெடி. ஆரோக்கிமான இந்த வடையை அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.