கேரளா ஸ்பெஷல் இனிப்புப் பணியாரம் செய்யலாம் வாங்க...!
ஊற வைத்த 1/2 கிலோ பச்சரிசியுடன், 1/2 கிலோ வெல்லத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
மாவில் ஒரு சிட்டிகை உப்பு, சோடா உப்பு, ஏலக்காய் தூள் தலா 1/2 ஸ்பூன் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
சூடான கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய், எள் 1/4 கப் வீதம் போட்டு நன்றாக வதக்கி, மாவில் கலக்கி மீண்டும் அரைத்து 2 மணி நேரத்துக்கு புளிக்க வைக்கவும்.
அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடானவுடன், ஒரு ஸ்பூன் நெய் விட்டு மாவை ஊற்றவும்.
பணியாரத்தை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
இப்போது சுவையான கேரளா ஸ்பெஷல் இனிப்புப் பணியாரம் ரெடி.