செரிமானத்தை தூண்டும் சுலைமானி டீ... எப்படி செய்யலாம்?
சுலைமானி தேநீர் என்பது அரேபியர்களிடமிருந்து தோன்றிய ஒரு தேயிலை பானமாகும். சுலைமானி என்றால் அமைதியான மனிதன் என அரபு மொழியில் அர்த்தம்.
இந்த டீயில் கண்டிப்பாக பால் சேர்க்க கூடாது. மேலும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, போன்ற மசாலா கலந்த கருப்பு தேநீராகும்.
இதெல்லாம் தேவை: ஏலக்காய் - 2, இஞ்சி நசுக்கியது - 1/2 ஸ்பூன், பட்டை - 1, கிராம்பு - 2, சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - 3-4 டீஸ்பூன், லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன், டீத்தூள் - 2 டீஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடு படுத்தவும். அதில அனைத்து மசாலா பொருட்களை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
பின் அதில் டீத்தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள்.
பச்சை வாடை போனவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதில் லெமன் ஜூஸ் சேர்க்க வேண்டும்.
இந்த டீ ஜீரண சக்தியை மேம்படுத்தும். பிரியாணி போன்ற கனமான உணவிற்கு பிறகு குடிப்பது மிகவும் நல்லது.