கற்பூரவல்லி இலை சட்னி ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: கற்பூரவல்லி இலை - 15, புளி, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, எண்ணெய் - சிறிதளவு.
பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல், உப்பு - தேவையான அளவு.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானவுடன், சுத்தம் செய்த கற்பூரவல்லி இலைகளை போட்டு நன்றாக வதக்கவும்.
ஓரு நிமிடத்துக்கு பின், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளியை வதக்கி, உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்த்தால், இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான 'கற்பூரவல்லி இலை சட்னி' ரெடி.
இதை இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடலாம். அஜீரணத்தை போக்க உதவும்.