கேரட் பாயாசம்... ரொம்ப ஈஸி !

தேவையானப் பொருட்கள்: கேரட் - 2, பால் -1 லிட்டர், சர்க்கரை - அரை கப், வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய் துாள் - சிறிதளவு.

கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அதனுடன், பால் ஒரு கப் சேர்த்து, மூன்று விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும்.

ஆறியவுடன், சர்க்கரை சேர்த்து, மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதில், மீதமுள்ள பால் மற்றும் ஏலக்காய் துாள் சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்.

பின், வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்தால் கேரட் பாயாசம் ரெடி.

சூடு ஆறியவுடன், பிரிஜ்ஜில் சிறிது நேரம் குளிர வைத்து சில்லென்று பரிமாறினால், குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.