ஹெல்த்தியான முருங்கைக்கீரை பூரி
தேவையானப் பொருட்கள்: முருங்கைக் கீரை - 1 கப், ஓமம் துாள் - 1 டேபிள் ஸ்பூன்.
கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய், சீரகம், உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
இதை அப்படியேவோ அல்லது வடிகட்டி சாறை மட்டும் எடுத்தோ பயன்படுத்தலாம்.
இதனுடன் கோதுமை மாவு, ஓமம் துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து பூரி பதத்துக்கு பிசையவும்.
பின், பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், இப்போது ஆரோக்கியமான, சுவையான முருங்கைக்கீரை பூரி ரெடி.
இரும்பு சத்து நிறைந்தது; காலை உணவாக சாப்பிட ஏற்றது.