ஆறு மாதக் குழந்தைக்கு வீட்டு உணவே சிறந்தது!
ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் இணை உணவுகள் எனப்படும். இதை 6 மாதத்திற்குப்பின் தள்ளிப்போடவும் கூடாது.
உணவு பழகும் பருவமான 6 மாதத்திலிருந்து 10 மாதம் வரை எந்த உணவினை தருகிறோமோ அதன் ருசிக்கு குழந்தை பழகிவிடும்.
ரெடிமேடாக விற்கப்படும் உடனடி உணவுகளை மட்டும் தந்து பழக்கிவிட்டால் சத்துள்ள கீரை,பருப்பு மற்றும் பயிறு வகைகளை குழந்தைகள் விரும்பாது.
முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும், பிறகு அரிசிக்கஞ்சி பருப்புக்கஞ்சி, காய்கறி கீரை வேக வைத்த நீர் தரலாம்.
முளைகட்டி பின் வறுத்து அரைத்த ராகி பவுடரில் சிறிது உப்பு சேர்த்து கூழாக கொடுக்கலாம் .
எந்த வகையான பழப் பழக்கத்தினை 6 மாதத்திற்கு பின்னர் பழக்கி விடுதல் நல்லது. புளிப்பு மிகுந்த பழங்களை தவிர்க்கலாம்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள காரம் போடாத சாம்பார், சட்னியுடன் சிறிது கொடுக்கலாம்.
குழந்தைக்கு பல் முளைக்கும் வரை மசித்தோ அல்லது மிக்சியில் அரைத்தோ தரலாம்.
இவை எல்லாம் கொடுத்தாலும் தாய்ப்பால் கொடுப்பதையும் தொடரவும்.