மழைக்காலத்தில் காய்கனிகளை பாதுகாப்பது எப்படி?

மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், காய்கனிகளை பாதுகாப்பது பெரும் சவாலே.

பருவமழைக்காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் சில பூஞ்சைகள் படரக்கூடும்.

இதை தடுக்க 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பழங்கள், காய்கறிகளை முக்கி கழுவி, உலர வைக்கலாம். வினிகருக்கு பூஞ்சை உருவாகுவதை தடுக்கும் தன்மையுள்ளது.

இது காய்கனி மேல் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் கிருமிகளை அகற்ற உதவும். வினிகர் தண்ணீரில் கழுவிய காய்கனிகளை துணியால் துடைத்தெடுத்து சேமித்து வைக்கலாம்.

புதினா, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, துளசி போன்ற செடிகளின் தண்டு பகுதியை நீரில் முழ்கும்படி வைக்கலாம்.

காய்கறிகள், பழங்களை ஒரே இடத்தில் வைக்காதீர்கள். ஏனெனில் வாழைப்பழம் போன்ற பழங்களிலிருந்து காய்கனிகளை பழுக்க வைக்கும் தன்மை கொண்ட எத்திலீன் வாயு வெளியாகும்.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைதனியாக ஒரு கூடையில் பரப்பி வைத்து சேமித்து வைக்கலாம்.

பொதுவாக மழைக்காலத்தில் கிடைக்கும் கீரைகளில் அதிக அளவில் நீர் இருக்கும். மேலும் மண், சேறு அதிக அளவில் இருக்கும். இந்த காரணங்களால் கீரைகள் விரைவில் அழுகிவிடும்.

இந்த பருவத்தில் வெட்டப்பட்ட காய்கறிகளில் விரைவில் கிருமிகள் உருவாகும். அதனால் கடைகளில் வெட்டி இருக்கும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.