ஆரோக்கியமான லட்டு என்றால் அது உலர் பழங்கள் கொண்டு செய்யப்படும் டிரை ப்ரூட்ஸ் லட்டு தான்.

கடைகளில் இதை நீங்கள் அவசியம் பார்க்கலாம். அத்தனையும் ஆரோக்கியம் மட்டுமே, ஆனால் விலையோ மிரள வைக்கும்.

குழந்தைகள், பெரியவர்கள் மட்டுமின்றி டயட்டில் இருப்பவர்கள் கூட இதை சாப்பிடலாம்.

பேரிச்சம் பழம், கருப்பு திராட்சை, உலர் திராட்சை, நறுக்கிய அத்தி பழம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் 2 சுற்று விடவும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா எடுத்து மிகவும் சிறிது சிறிதாக உடைத்து வைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் வெள்ளரி விதையை சேர்த்து லேசாக வறுக்கவும்.

அதனுடன் பேரிச்சம்பழம் கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது ஆற விடவும்.

பின்னர், கையில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக பிடித்தால், சத்தான நட்ஸ் லட்டு ரெடி.