உடலுக்கு ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தின் 8 நன்மைகள்
பலாப்பழத்திலுள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பலாக்கொட்டையிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடல் செல்களிலுள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வராமல் காக்கும்.
இதில், நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல், செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது; குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்புகள்
மற்றும் பற்களை இதிலுள்ள கால்சியம் உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம்,
மூட்டு வலி பிரச்னைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
ரத்தத்திலுள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதிலுள்ள கரோட்டினாய்டு சத்து, டைப் 2 நீரிழிவு பாதிப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இதில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கிறது.
இதிலுள்ள
இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை
உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்னைகளையும் சரிசெய்கிறது.