எக்க சக்க பலன்களை அள்ளி தரும் ஏலக்காய் தேநீர்!

ஏலக்காயில் உள்ள, 'வாலட்டைல்' என்ற எண்ணெய் தான், நறுமணத்தை தந்து, நோய்களை குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது.

இதில் உள்ள, கார குணம், வயிற்றுப் பொருமலை குணமாக்கி, எளிதில் செரிமானம் ஆக துாண்டுகிறது.

ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவர். காலையில், தேநீர் அல்லது காபியில், ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் போது 3 ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி, சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால், தலைசுற்றல் உடனே நீங்கும்.

ஒரு கப் நீரில், இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி போட்டு, புதினாவை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தினால், விக்கல் தீரும்.

சிறிதளவு ஏலக்காயை பொடியை, அரை டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, உணவு உட்கொள்வதற்கு முன், இந்நீரை குடித்தால், வாய்வு தொல்லை நீங்கி விடும்.

மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும், ஏலக்காய் நிவாரணம் தருகிறது. 4 ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால், மூக்கடைப்பு நீங்கும்.