வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் மேங்கோ ஐஸ்கிரீம்..!

ஒரு கடாயில் 1/2 லி., பாலை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பின் 1/4 கப் சோள மாவை பாலில் கலந்து கொதிக்க வைக்கவும்.

இதனுடன் 1 கப் சர்க்கரை சேர்த்துத் கெட்டியாக மாறும் வரை கிளறி வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் நறுக்கிய 5 மாம்பழங்களை பேஸ்ட் பதத்துக்கு அரைக்கவும். தொடர்ந்து, பால் கலவையையும் சேர்த்து அரைக்கவும்.

இதை ஒரு பவுலில் மாற்றி பிரிட்ஜில் 3 மணி நேரம் வைக்க வேண்டும்.

பின்னர், மீண்டும் அதை மிக்ஸியில் அரைத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

8 மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறினால் இப்போது, சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் ரெடி.