சுட்ட தக்காளி தொக்கு ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: தக்காளி - 3, உருளைக்கிழங்கு -1, சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 10 பற்கள், பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - 1 கொத்து, கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள் துாள் - 1/4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.
விறகு அடுப்பில் அல்லது நெருப்பில், வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக நன்கு சுட்டு எடுத்துக் கொள்ளவும். பின், பூண்டு, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கையும் சுட்டு தனியாக வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து சூடு ஆறியவுடன் அவற்றின் தோலை நீக்கி, அம்மியில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
தொடர்ந்து, இடித்து வைத்ததை கடாயில் போட்டு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகளை லேசாக துாவி இறக்கினால், சுட்ட தக்காளி தொக்கு இப்போது ரெடி.