பொங்கல் ஸ்பெஷல் இஞ்சி பச்சடி! ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்: இஞ்சி - ஒன்றரை அங்குலம், உப்பு, வெல்லத்துருவல் - சிறிதளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு ஊற வைத்து கரைத்தது, எண்ணெய் - சிறிதளவு, சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, பெருங்காயத்துாள்.

செய்முறை: இஞ்சியை தோலெடுத்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதோடு புளிக்கரைசல், உப்பு, வெல்லம், சாம்பார்ப்பொடி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பச்சடி போல கெட்டிப்பட்டதும் இறக்கி வைக்கவும்.

பொங்கலுக்கு தோதான இந்த பச்சடியை விருந்து சாப்பாட்டிலும் சிறிது சேர்த்துக் கொண்டால், நன்கு செரிமானம் ஆகும்.