நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனிப்புகளை அறவே தவிர்த்து தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வர்.

இவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என பலத்த சந்தேகம் நிலவுகிறது.

பொதுவாக சர்க்கரை பொங்கல் செய்ய பயன்படுத்தப்படும் நாட்டு வெல்லம் (ஜாகிரி), பல ரசாயானங்கள் சேர்க்கப்பட்ட வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

இதனாலேயே வெள்ளை சர்க்கரையை விட சற்று கூடுதல் விலை கொண்ட ஜாகரி பவுடர் பால், காபி, டீ உள்ளிட்ட பானங்களில் சுவை சேர்க்க கலக்கப்படுகிறது.

வெள்ளை சர்க்கரையை விட நாட்டு வெல்லத்தால் உருவான இந்த பவுடரின் சுவை நன்றாக இருப்பதாலும், உடல் அரோக்கியத்தை பாதிக்காததாலும் பலரும் இதை தற்போது பயன்படுத்துகின்றனர்.

சர்க்கரைப் பொங்கல் தயாரிக்க இந்த ஜாகரி பவுடர் கொண்டு வெல்லப் பாகு தயாரிக்கப்படுகிறது.

இந்த ஜாகரி சர்க்கரைப் பொங்கல் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட ஏற்றது என பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் இதுவும் நாள்பட்ட நீரிழிவு பாதிப்பில் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதே உண்மை.

வெள்ளை சர்க்கரை அளவுக்கு அதிக கிளைசிமிக் இன்டெக்ஸ் இதில் இல்லாவிட்டாலும் ரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்து மிளகு கலந்த வெண்பொங்கல் சாப்பிடுவது நல்லது. அல்லது மிகக் குறைந்தளவு பொங்கல் சாப்பிடுவது பாதுகாப்பானது.