முட்டை வேக 7 நிமிடம் போதுமா?
முட்டையை வேக வைப்பது சுலபம் தான், ஆனால் எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கும் குழப்பம் உண்டு.
குறிப்பாக சரியான பதத்தில் வேக வைத்தால் தான் அதன் ஊட்டச்சத்து அப்படியே கிடைக்கும் என கூறப்படுகிறது.
100 டிகிரி செல்சியஸ் உள்ள கொதிக்கும் நீரில் மூழ்கும் அளவிற்கு முட்டையை போட்டால்தான் அது நன்றாக வேகும்.
நல்ல வேகட்டும் என முட்டையை 15 முதல் 20 நிமிடங்கள் வேக வைப்பது தவறு.
அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் முட்டையில் பிரவுன் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் படிந்துவிடும்.
அப்படி நிறம் மாறிய முட்டைகள் சத்துகளின் தன்மை மாறக்கூடும் என கூறப்படுகிறது .
முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது கொதி நிலைக்கு வரும் போது அதில் முட்டையைப் போட்ட 7 - 8 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து விடலாம். இதுதான் முட்டையை சரியாக வேக வைக்கும் முறையாகும்.