டேஸ்டியான பழைய சாத ரொட்டி... ரொம்ப ஈஸி !

இரண்டு கப் பழைய சாதத்துடன் சிறிதளவு துருவிய கேரட், பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும்.

இதில், சிறிதளவு சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அழுத்தி பிசையவும்; தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.

பின், ஒரு கப் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இறுதியாக சிறிது எண்ணெய் சேர்த்து பிசையலாம்.

ஒரு தட்டில் வாழை இலை அல்லது பட்டர் பேப்பர் வைத்து, சிறிது மாவை எடுத்து, வட்டமாக கைகளால் சப்பாத்தி போன்று தட்டவும். எண்ணெயை தடவி அழுத்தலாம்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்தவுடன் ரொட்டியை போட்டு, சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறமானவுடன் எடுக்கவும்.

இப்போது, முறுகலான, சுவையான பழைய சாத ரொட்டி ரெடி. இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை.

குழந்தைகள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர் என்பதால், இனி, சமைத்த சாதம் மீதமாகிவிட்டால் அதை வீணாக்காமால் ரொட்டி செய்து அசத்தலாம்.