கண் பார்வை திறனை கூட்டும் முருங்கைப்பூ பால்!
முருங்கைமர பூக்களில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி ஆகியன நிறைந்துள்ளன.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் குடித்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயாகரா என்றும் கூறுவர்.
ஆண்மை அதிகரிக்கும் தாது, முருங்கைப்பூவில் அதிகம் இருக்கிறது. நன்கு காய்ச்சிய பசுவின் பாலில், முருங்கைப்பூக்களை போட்டு தினமும் குடித்து வந்தால், தாது பலம் பெறும்.
இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், சூடு தணியும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும் முருங்கைப்பூ பயன்படுகிறது.
பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
இந்த பால் செய்ய தேவையான பொருட்கள்: முருங்கைப் பூ - 1 கப், பால் - 2 கப், வெல்லம் அல்லது சர்க்கரை - 2 தேக்கரண்டி
செய்முறை: பசும் பாலை கொதிக்க விடவும். அதில், சுத்தம் செய்த முருங்கைப்பூவை போட்டு, மிதமான சூட்டில் சுண்டக் காய்ச்சவும்.
அதனுடன், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும். இரும்புச்சத்து மிகுந்த, 'முருங்கைப்பூ பால்' தயார்.
இதமான சூட்டில் பரிமாறலாம். மிகச் சுவையாக இருக்கும். கண் பார்வை திறனை கூட்டும். சிறுவர், சிறுமியர் விரும்பி பருகுவர்.