மாலை நேர ஸ்நாக்ஸ்: மொறு மொறு எக் லாலிபாப்...!

மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சூப்பரான எக் லாலி பாப் டிஷ் எப்படி செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : வேக வைத்த முட்டை - 5, மிளகாய் தூள், மல்லித்தூள், சாட் மசாலா தலா 1/2 ஸ்பூன்; கரம் மசாலா, மஞ்சள் தூள் - தலா ¼ ஸ்பூன், வெங்காயம் - 1(நறுக்கியது),

இஞ்சி,பூண்டு விழுது - 2ஸ்பூன் , பச்சை மிளகாய் - 1(நறுக்கியது), கொத்தமல்லி - சிறிதளவு, மைதா - 4ஸ்பூன், கோதுமை மாவு : 1ஸ்பூன்; பிரட் தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: ஒரு பவுலில் வேகவைத்த முட்டையை நைசாக சீவி கொள்ள வேண்டும்.

அதனுடன் அனைத்து மசால் தூள்களுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மைதா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசைந்து, அந்த கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு பவுலில் 1ஸ்பூன் மைதா மாவு, 1ஸ்பூன் கோதுமை மாவு சேர்ந்து தண்ணீர் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஒரு பிரட் தூளை பரப்பி கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள லாலிபாப் உருண்டையை மாவு கரைசலில் நனைத்து, அதை பிரட் தூளை தடவி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் முட்டை லாலிபாப் தயார்.