ஹெல்த்தியான பனங்கிழங்கு பாயசம் ரெசிபி
தேவையான பொருட்கள்: பனங்கிழங்கு - 4, தேங்காய் பால் - 1 கப், பனை வெல்ல கரைசல் - 150 மி.லி.,
ஏலக்காய்த்துாள், நெய், முந்திரி, திராட்சை மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
பனங்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேக வைத்து, தோல் நீக்கி நன்றாக விழுதாக அரைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானவுடன், அரைத்த விழுது, பனை வெல்ல கரைசல் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும்.
சூடு தணிந்த பின், தேங்காய் பால், ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.
இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பனங்கிழங்கு பாயசம் ரெடி.