வீகன் டயட் இருந்தால் உடல் எடை குறையுமா?

வீகன் டயட் என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும்.

ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க இந்த டயட் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து உணவு நிபுணர்கள்.

பால், நெய், மாமிச உணவுகள், முட்டை, தேன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கவே பலர் இந்த டயட்டை பின்பற்றுகிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேங்காய்பால், பாதாம் பால் ஆகியவற்றை அருந்தலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை இந்த டயட் முறையில் பெறலாம்.

சைவ உணவு எடுப்பது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும். அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவையும் சீராகும்.

புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் வீகன் டயட் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த டயட்டை பின்பற்றும் போது, தினசரி மேக்ரோ நியூட்ரியண்ட் மற்றும் கலோரி தேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த டயட்டைப் பின்பற்றும் முன் மருத்துவரை அணுகி, உங்கள் உடலின் தன்மைக்கு வீகன் டயட் உகந்ததா என அறிந்து கொண்டு பின்பற்றலாம்.