மாரடைப்பை தடுக்கும் மாதுளை டீ!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு, தோலை துாக்கி எறியாமல், சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி, அதில் டீ தயாரித்து குடிப்பதால், ரத்தக் கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கும்;

இதனால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்; மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பும் மிகவும் குறைவு.

மாதுளையில், விட்டமின் 'சி'யுடன் கால்சியம், மெக்னீசியம் சத்துக்களும் அதிகம். எனவே, ஈறுகளில் வரும் ரத்தக் கசிவைத் தடுப்பதோடு பற்களில் சிதைவு, சொத்தை ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

மாதுளையின் தோலை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி, இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.

இத்துடன் கால் டீ ஸ்பூன் மஞ்சள், சிட்டிகை ஏலக்காய் துாள் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றியதும், வெது வெதுப்பாக குடிக்கலாம்.

இனிப்பு தேவை எனில் பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

எலும்புகளை வலுவடைய செய்யும், கால்சியம், மெக்னீசியம் இதில் அதிகம் உள்ளது. காலை, மாலை என்று எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.