கேரளா ஸ்பெஷல் பிளாக் அல்வா ரெசிபி

தேவையானப் பொருட்கள்: தேங்காய் பால் - 2 கப், அரிசி மாவு - 0.25 கப்.

நாட்டுச்சர்க்கரை - 1.5 கப், முந்திரி பருப்பு - 20, நெய் - 1 கப்.

தேங்காய் பாலுடன், நாட்டு சர்க்கரை, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை கடாயில் ஊற்றி, அடுப்பில் மிதமான தணலில் வைத்து கை விடாமல் கிளறவும்.

பின், சிறிது சிறிதாக நெய் சேர்க்க வேண்டும்.

அல்வா பதம் வரும் வரை கிளறி கொண்டே முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

இப்போது, பாரம்பரிய சுவையில் பிளாக் அல்வா ரெடி.