சுவையான மாதுளம் பூ துவையல் !
தேவையான பொருட்கள்: மாதுளம் பூ - 2 கப், தேங்காய் துருவல் - 1 கப், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன்,
மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் - தேவையான அளவு, நல்லெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் - சிறிதளவு.
ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, சூடானவுடன், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
பின், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், நறுக்கிய துண்டாக்கிய பச்சை மிளகாய் மற்றும் மாதுளம் பூவை சேர்த்து மேலும் வதக்கவும்.
சூடு ஆறியவுடன் தேவையானளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்தால், சத்துக்கள் நிறைந்த, 'மாதுளம் பூ துவையல்' ரெடி.
இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம். சுடுசாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.