நினைத்தாலே இனிக்கும்… கோகோ பயன்களோ ஏராளம்….

கோகோவில், வைட்டமின்கள், 'ஏ, பி, ஈ' மற்றும் போலிக் அமிலம், பிளாவனாய்டுகள், மக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது.

கோகோ மர விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்துடன் சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது, சாக்லேட்.

கோகோ, உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த நாளங்கள் வலுப்படுத்த உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தி வயது முதிர்வை தடுக்கிறது.

இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை, 10 சதவீதம் இவை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

70 சதவீதம் கோகோ கலந்த டார்க் சாக்லேட்கள், உடல் உள் காயங்களை ஆற்றி, உள் வீக்கங்களையும் குறைப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இவை புரோஸ்டேட், மார்பக புற்றுநோய், பெருங்குடல், கணையம் மற்றும் ரத்த புற்றுநோய்களை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டவை.

காலை அல்லது மாலையில் சாக்லேட் சாப்பிடுவது, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைப்பதுடன், குளூக்கோஸ் அளவையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.