ராகி சாக்லேட் கேக்... ரொம்ப ஈஸி !

தேவையானப் பொருட்கள்: ராகி மாவு - 2 கப், வெல்லம் - சுவைக்கேற்ப, கோ கோ பவுடர் - 2 டீஸ்பூன், தயிர், பேக்கிங் பவுடர் மற்றும் எண்ணெய் - சிறிதளவு.

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோ கோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்கவும்.

இதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, நன்கு கலக்கிய பின், சிறிது எண்ணெய் சேர்த்து கிளறவும்.

சிறிது கெட்டியான பதத்துக்கு வந்தவுடன், பேக் செய்யும் பாத்திரம் அல்லது சிறிய பவுலில் மாற்றி மைக்ரோ ஓவனில், 2 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.

மைக்ரோ ஓவன் இல்லாவிட்டால், குக்கரிலும் செய்யலாம்.

இறுதியாக அதற்கு மேல், மெல்டட் டார்க் சாக்லேட் எனும் டார்க் சாக்லேட் சிரப் ஊற்றவும்.

சுவைக்காக நறுக்கிய பாதாம், முந்திரியை, அதன் மேல் துாவினால் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவையான ராகி சாக்லேட் கேக் இப்போது ரெடி.