சமையல் எண்ணெய் வகைகள், நன்மைகள் அறிவோமா…
ஒருவர் அன்றாட உணவில் 15 மி.லி. வரை எண்ணெயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களின் தன்மை, பயன்கள் அறிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெய்யில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் புற்றுநோய் வராமல் பாதுக்காக்கும். இதனை குளிர்ச்சிக்காக தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம்
தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகொண்ட லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம்.
நிலக்கடலை எண்ணெயில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஒலிக் அமிலம் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சாலெட்டிற்கு மிகவும் ஏற்றது.
நெல்லின் தவிட்டில் இருந்து பெறப்படுவது தவிட்டு எண்ணெய். இது நல்ல கொழுப்பு வகையறாக்களுடன், இதயத்துக்கு நன்மை பயக்கும் ஆன்டிஆக்சிடென்ட்டுகள் கொண்டது.
செக்கிலிருந்து ஆட்டிய எண்ணெய் என்றாலும் அளவுக்கு மீறி சேர்க்காதீர்கள். குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிருங்கள்.
குறிப்பிட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தாமல் அனைத்து எண்ணெய்களையும் மாறி மாறி பயன்படுத்துங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.