நார்ச்சத்துள்ள தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரை போன்றவற்றை குறைவாக உண்பதாலேயே மலச்சிக்கல் அதிகமாக ஏற்படும். மலச்சிக்கலை போக்கும் உணவுகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்க உதவும். இதில் உள்ள செல்லுலோஸ், லிக்னின் மற்றும் பெக்டின் போன்ற நார்ச்சத்துகள் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக செயல்படும்.
தினசரி உணவில் முளைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முருங்கைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது.
ஒரு தேக்கரண்டி வறுத்த ஆளிவிதையில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை தூண்டி, மலம் எளிதில் வெளியேற உதவி செய்கிறது.
திராட்சைப் பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும் . மேலும் காய்ந்த திராட்சை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வந்தால் மறுநாள் காலை தாராளமாக மலம் வெளியேறும்.
நார்ச்சத்து அடர்த்தியான உணவுகளில் சியா விதைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மலத்தை ஈரமாக்கி எளிதாக அகற்ற உதவுகிறது.
இரவு முழுக்க நீரில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். மேலும் பேரீச்சம்பழத்தின் முழு ஊட்டச்சத்து பலனையும் பெற முடியும்.
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது சீரான குடல் இயக்கம் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்.