தீபாவளி ஸ்பெஷல் சம் சம் ரெசிபி!
தேவையானவை: பனீர் - ஒரு கப், சர்க்கரை - ஐந்து கப், தண்ணீர் - மூன்று கப்
ஆரஞ்ச் புட் கலர் - கால் தேக்கரண்டி, கொப்பரைத் துருவல் - அரை கப், மைதா மாவு - இரண்டு தேக்கரண்டி.
செய்முறை: பனீரில் புட் கலர், மைதா மாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து உள்ளங்கையில் வைத்து சிறிய உருளை வடிவத்தில் உருட்டவும். இந்த உருளைகளை ஒரு தட்டில் வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி தளதளவென்று கொதிக்க விடவும்.
அதில், சம் சம் உருளைகளை கொட்டவும். அதிக தீயில், 15 நிமிடம் பாகு நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு, இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி, மூன்று மணி நேரம் ஆறவிடவும்.
ஊறிய சம் சம்களை எடுத்து, அதன் மேல் கரண்டியால் அழுத்தி அதிகப்படியான சர்க்கரைப்பாகை வெளியே எடுத்து விடவும்.
கொப்பரை துருவலில் புரட்டி, பரிமாறவும். குறிப்பு: மாவை நன்றாக பிசைவது அவசியம்.