இன்று உலக தேங்காய் தினம்

தேங்காய் விளைச்சலில் உலகில் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திராவில் உள்ளது.

தேங்காய் பயன்பாட்டின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப். 2ல் உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தென்னை மரத்தின் அனைத்து பாகமும் மக்களுக்கு பயன்படுகிறது. மேலும் லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது.

இது உணவு எண்ணெய், மருத்துவம், அழகு சாதனப் பொருள் என பலவிதங்களில் பயனளிக்கிறது.

தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளன.

ஆரோக்கிய நன்மைகள், ஊட்டச்சத்து மட்டுமல்லாமல் கலாச்சாரம், மற்றும் பொருளாதர மேம்பாடுக்கு உதவும் தேங்காய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினத்தில் வலியுறுத்தபடுகிறது.