இன்று உலக சுகாதார தினம்!

சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப். 7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் 1948 ஏப்.7ல் நிறுவப்பட்டது. இந்நாளே உலக சுகாதார தினமாக உருவாக்கப்பட்டது.

'சுகாதாரத்துக்காக ஒன்றிணைவோம். அறிவியலுடன் துணை நிற்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும்.

சத்தான உணவு எடுப்பது, போதிய துாக்கம், தினமும் யோகா, 40 நிமிட நடைபயிற்சி, மது, புகைப்பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடித்தால் நோயின்றி வாழலாம்.

உடல் ரீதியான ஆரோக்கியம் மட்டுமல்ல, மனம் மற்றும் சமூக நல்வாழ்வின் முழுமையான நிலையைக் குறிக்கிறது.

மன அழுத்தம் இல்லாதிருந்தால், மகிழ்ச்சியாக வாழலாம், சமூகத்துடன் நல்ல உறவைப் பேணுதல் ஆகியவை மன ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.

உலக சுகாதார நாள் என்பது அரசாங்கங்களுக்கான அழைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விடுக்கப்படும் நினைவூட்டல்.