உங்க வயது 35 பிளஸ்ஸா ? அப்போ எலும்பு ஆரோக்கியத்தில் கவனம்

உடலின் தூணாக செயல்படுவது எலும்புகள் என்பதால் இதை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சராசரியாக 30 வயது வரை எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து காணப்படும். 35 வயதுக்கு மேல் இந்த எலும்பு அடர்த்தி படிப்படியாக குறையத்துவங்கும்.

எலும்புகளை வலிமையாக வைத்திருக்க கால்சியம் சத்து அவசியமானது. எனவே, பால் பொருட்கள், ராகி, ப்ரோக்கோலி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் சாப்பிடலாம்.

அசைவ உணவுகளை பொறுத்த வரை சிக்கன், மீன், இறால், முட்டை போன்றவற்றை உட்கொள்ளலாம்.

கால்சியம் சத்து மட்டுமே இதற்கு போதாது. கால்சியம் எலும்புக்கு செல்ல வேண்டுமெனில் வைட்டமின் டி கட்டாயம் தேவை. எனவே, தினமும் அரைமணி நேரமாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இதேபோல் புரதச்சத்தும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கொண்டைகடலை, பால் பொருட்கள், சிக்கன், மீன், முட்டை உட்பட பல்வேறு உணவுகளில் இதை பெறலாம்.

இதுதவிர, சரியான உடற்பயிற்சியும் அவசியம். நடைபயிற்சி, புஷ் அப்ஸ், ஸ்குவாட்ஸ், ஸ்கிப்பிங் போன்றவற்றை தினமும் 20 நிமிடங்களாவது மேற்கொள்ள வேண்டும்.