கருவளையங்கள் முதல் வறட்சி வரை.. சரும பராமரிப்பில் நெய்யின் மேஜிக் !
நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இது சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
குளிப்பதற்கு முன் சருமத்தில் நெய்யை மிருதுவாக தேய்த்து வர, நாளடைவில் இது சருமத்தை மிருதுவாக மாற்றும்.
உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகளில் நெய்யை அவ்வப்போது தடவி, ஒரு சில நிமிடங்கள் கழித்து துடைத்து வர, நாளடைவில் வறட்சி நீங்கும்.
கண்ணுக்குக் கீழேயுள்ள கருவளையத்தை சுற்றி சிறிது நெய்யைத் தேய்ப்பது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின் ஏ கொலாஜன் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. இது சுருக்கங்கள் மற்றும் வயதான துவக்க நிலை அறிகுறிகளைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தி, உடலிலுள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்படுவதால், சருமம் பளபளப்பாக இருக்கும்.