மழைக்காலத்தில் கைக்கொடுக்கும் அதிமதுரம்!

குன்றிமணி என்னும் செடியின் வேர் தான் அதிமதுரம். அதிமதுரத்திற்கு அதிங்கம், அஷ்டி, மதுகம், முலேத்தி, இரட்டிப்பு, மதுரம் போன்ற வேறுப் பெயர்களும் உண்டு.

இது இனிப்பு சுவையுடன் இருக்கும். இதனாலேயே இதை, 'லிகோரைஸ்' (Liquorice) எனவும் அழைக்கின்றனர். இது உலகம் முழுவதும் கைவைத்தியம் முறையில் பயன்படுத்துகின்றனர்.

இதன் வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டது. இது இருமல், சளி மட்டுமில்லாமல் மாதவிடாய் வலி, மலச்சிக்கல், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

அதிமதுரம் தொண்டை வலியை கையாள்வதில் மிகவும் பயனுள்ள ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாகும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் அதிமதுரப் பொடியைச் சேர்த்து, தினமும் குடித்துவர, குளிர்காலத்தில் தொண்டைத் தொற்று வராமல் தடுக்கும்.

அதிமதுரத்தின் ஒரு துண்டை அப்படியே உட்கொள்ள அளிக்கலாம். இதனால் இருமல், சளி, தொண்டை புண் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து விடுப்படலாம்.

டீ, காபியை தவிர்க்க விரும்புவோர் அதிமதுர பானத்தை இந்த பருவக்காலத்தில் தேர்வு செய்யலாம்.

இரு டீஸ்பூன் அதிமதுரத்தூள் அதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் சில துளசி இலைகளை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மிகவும் பயனுள்ள ஆயுர்வேத மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.