தயிரை சாப்பிடும் போது கொஞ்சம் கவனமாக இருங்க !

தயிரை நேரடியாக எடுத்துக்கொண்டால் சில சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

தயிரில் அதிகளவு பாக்டீரியா உள்ளதால், சரியான அளவில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் பாக்டீரியாவில் உள்ள லாக்டோஸ், லாக்டிக் அமிலமாக மாறி, குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டும்.

ஆனால், சிலர் தயிருடன் வெங்காயத்தை சேர்த்து 'ஆனியன் ரைத்தா'வாக காரம் மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த பிரியாணியுடன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்படி சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டும்.

இதனால் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு வழி வகுக்கும். எனவே, இவ்வாறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.