தினமும் 30 நிமிட ஜாக்கிங்… உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை தரும்!!
உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலையில் ஜாக்கிங் செய்வது வாக்கிங் செல்வதை விட அதிக பலனை தரும். மிதமான வேகத்தில் ஜாக்கிங் போல ஓடி பயற்சி செய்தாலே போதுமானது.
ஜாக்கிங் செய்ய விரும்புவோர் முதலில் எளிய நடபயிற்சியாக தொடங்கி, பின்னர் படிப்படியாக விறுவிறுப்பான நடைபயிற்சிக்கு செல்லவும். நிறைவாக ஜாகிங் செய்ய துவங்கலாம்.
தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஜாக்கிங் செய்வதால் மன அழுத்தம் இருப்பவர்களுக்கு மனநிலையில் நல்ல முன்னேற்றம் வரும். பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியனவும் குறையும்.
உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், மேலும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூளையில் இருந்து கால்கள் வரை முழு ஆரோக்கிய பலன்களை ஜாக்கிங் அள்ளி தரும்.
தினமும் ஒரு கி.மீ தூரம் வரை ஜாக்கிங் சென்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும். மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கப்படும்.
குறிப்பாக கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கும். மேலும் தசைநார்கள் வலிமை அடையும். உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்பை குறைக்கிறது.